• Nov 23 2024

புற்றுநோய்க்கு 100 ரூபாயில் மருந்து: வியக்க வைத்த ஆராச்சியாளர்கள்..!!

Tamil nila / Mar 1st 2024, 7:33 pm
image

உயிர் கொல்லி ஆபத்தான புற்றுநோய்க்கு மருந்துக் கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், டாடா மெமோரியல் மருத்துவமனை 100 விலையில் மிகக் குறைவான செலவில், மாத்திரைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளது.

குறிப்பாக இந்த மாத்திரைகள் புற்று நோய் சிகிச்சை மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைத்து, மீண்டும் புற்றுநோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது.

இந்த புதுமையான மருத்துவ சாதனை குறித்து டாடா மெமோரியல் சென்டரின் இயக்குநர் டொக்டர் ராஜேந்திர பட்வே,  விவரித்திருக்கிறார்.

மேலும் கடந்த 10 வருட கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலனாக இதை பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

வரும் ஜூன், ஜூஸை மாதங்களுக்குள்ளாக, இந்த மருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான அனுமதியை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற்று நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும்.

இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைக்கவும் வராமல் தடுக்கவும் உதவி செய்யும். அதோடு புற்றுநோய் வரும் ஆபத்தை 33 சதவீதம் குறைக்கிறது.

மேலும் ஆரோக்கியமான உயிரணுக்கள் புற்றுநோய் செல்களாக மாறுவதற்கு குரோமோடின் துகள்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. இவை நம்முடைய உடல் செல்கள் அழியும் போது அவற்றால் வெளியிடப்படுபவை.

இந்த குரோமோடின் செல்கள் தான் புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றன.  இந்த குரோமோடின் துகள்களை நடுநிலையாக்கும் வேலையை இந்த மருந்துகள் செய்கின்றன.

குறிப்பாக டாடா மெமோரியல் சென்டரின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர். இந்திரனீல் மித்ரா, எலிகளில் மனித மார்பகப் புற்றுநோய் செல்களைச் செலுத்தி, ஆய்வு செய்ததில், அதனால் ஏற்படுத்திய பக்க விளைவுகளை இந்த மருந்துகள் எப்படி தடுக்கின்றன என்று பரிசோதித்து பார்த்ததாகக் கூறியிருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய விஞ்ஞானிகளால் புற்றுநோய் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றியும் அறிவித்துள்ளார். 

இந்த ஆய்வு முன்னேற்றங்கள் புற்றுநோய் குறித்த உலக நாடுகளிடையே இருக்கும் அச்சத்தைக் குறைக்க உதவும் என்கிற நமபிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.


புற்றுநோய்க்கு 100 ரூபாயில் மருந்து: வியக்க வைத்த ஆராச்சியாளர்கள். உயிர் கொல்லி ஆபத்தான புற்றுநோய்க்கு மருந்துக் கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், டாடா மெமோரியல் மருத்துவமனை 100 விலையில் மிகக் குறைவான செலவில், மாத்திரைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளது.குறிப்பாக இந்த மாத்திரைகள் புற்று நோய் சிகிச்சை மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைத்து, மீண்டும் புற்றுநோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது.இந்த புதுமையான மருத்துவ சாதனை குறித்து டாடா மெமோரியல் சென்டரின் இயக்குநர் டொக்டர் ராஜேந்திர பட்வே,  விவரித்திருக்கிறார்.மேலும் கடந்த 10 வருட கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலனாக இதை பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். வரும் ஜூன், ஜூஸை மாதங்களுக்குள்ளாக, இந்த மருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான அனுமதியை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புற்று நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் நிறைய பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும்.இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைக்கவும் வராமல் தடுக்கவும் உதவி செய்யும். அதோடு புற்றுநோய் வரும் ஆபத்தை 33 சதவீதம் குறைக்கிறது.மேலும் ஆரோக்கியமான உயிரணுக்கள் புற்றுநோய் செல்களாக மாறுவதற்கு குரோமோடின் துகள்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. இவை நம்முடைய உடல் செல்கள் அழியும் போது அவற்றால் வெளியிடப்படுபவை.இந்த குரோமோடின் செல்கள் தான் புற்றுநோய் செல்களை உருவாக்குகின்றன.  இந்த குரோமோடின் துகள்களை நடுநிலையாக்கும் வேலையை இந்த மருந்துகள் செய்கின்றன.குறிப்பாக டாடா மெமோரியல் சென்டரின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர். இந்திரனீல் மித்ரா, எலிகளில் மனித மார்பகப் புற்றுநோய் செல்களைச் செலுத்தி, ஆய்வு செய்ததில், அதனால் ஏற்படுத்திய பக்க விளைவுகளை இந்த மருந்துகள் எப்படி தடுக்கின்றன என்று பரிசோதித்து பார்த்ததாகக் கூறியிருக்கிறார்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய விஞ்ஞானிகளால் புற்றுநோய் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றியும் அறிவித்துள்ளார். இந்த ஆய்வு முன்னேற்றங்கள் புற்றுநோய் குறித்த உலக நாடுகளிடையே இருக்கும் அச்சத்தைக் குறைக்க உதவும் என்கிற நமபிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement