மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த விடயத்தினை முழுமையாக முன்வைக்க முடியாத வகையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தமது உரையை ஆரம்பித்தவேளை குறுக்கிட்ட சபாநாயகர் இந்த விடயத்தினை சபை ஒத்திவைப்பு பிரேரணை ஊடாக முன்வைக்குமாறு கோரினார்.
இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல. நாடாளுமன்ற நடைமுறைக்கமைய இதற்கான நேரத்தினை தற்போது வழங்குவதற்கான சாத்தியம் இல்லை. சபை ஒத்திவைப்பு பிரேரணை ஊடாக இந்த விடயத்தை முன்வையுங்கள்.
அவ்வாறு இல்லை எனில் 27/2 இன் கீழ் இந்த விடயத்தைக் கேள்வியாக முன்வைக்குமாறு சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.
இந்த நிலையிலே, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களின்போது 92/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைப்பதற்கு ஒரு நிமிடம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கேள்விகளை முன்வைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரினார்.
இதன்படி, தமக்கான நேரத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குக் கேள்விகளைத் தொடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனச் சபையில் கோரினார்.
92/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைக்க முன்னர் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்களுக்கு விரைவில் தீர்வு வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் குறித்த விடயத்தினை முழுமையாக முன்வைக்க முடியாத வகையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தமது உரையை ஆரம்பித்தவேளை குறுக்கிட்ட சபாநாயகர் இந்த விடயத்தினை சபை ஒத்திவைப்பு பிரேரணை ஊடாக முன்வைக்குமாறு கோரினார். இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல. நாடாளுமன்ற நடைமுறைக்கமைய இதற்கான நேரத்தினை தற்போது வழங்குவதற்கான சாத்தியம் இல்லை. சபை ஒத்திவைப்பு பிரேரணை ஊடாக இந்த விடயத்தை முன்வையுங்கள். அவ்வாறு இல்லை எனில் 27/2 இன் கீழ் இந்த விடயத்தைக் கேள்வியாக முன்வைக்குமாறு சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார். இந்த நிலையிலே, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னதாக பல்வேறு சந்தர்ப்பங்களின்போது 92/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைப்பதற்கு ஒரு நிமிடம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கேள்விகளை முன்வைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரினார். இதன்படி, தமக்கான நேரத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குக் கேள்விகளைத் தொடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனச் சபையில் கோரினார். 92/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைக்க முன்னர் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.