• Nov 24 2024

பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம்..! பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Mar 13th 2024, 8:17 am
image

  

நாட்டில்  நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார்.

இந்த மோசமான நிலைமை வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும்.

எனவே, பிள்ளைகளை வெளி நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்வதாயின் காலை வேளையில் அதனை மேற்கொள்ளுமாறு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள் அதிகமாக வெளியில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால் அவர்களுக்கு சோர்வு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம். பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை   நாட்டில்  நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார்.இந்த மோசமான நிலைமை வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம் அல்லது துரதிர்ஷ்டவசமாக மரணத்துக்கு வழிவகுக்கும்.எனவே, பிள்ளைகளை வெளி நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்வதாயின் காலை வேளையில் அதனை மேற்கொள்ளுமாறு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.பாடசாலைகளில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதனால், பிள்ளைகள் அதிகமாக வெளியில் உள்ளனர்.இவ்வாறான நிலையில் சுற்றுச்சூழலின் வெப்பம் அதிகரிப்பதால் அவர்களுக்கு சோர்வு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement