• May 18 2024

மந்திர ஆடையை வடிவமைத்த சீன மாணவர்கள்: ஆடைக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா!

Sharmi / Dec 12th 2022, 12:21 pm
image

Advertisement

உலகத்தில் இருந்து உங்களை மறைக்கும் ‘மந்திர ஆடை’ இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வந்துவிடும். இந்த சிறப்பு ஆடை உலகத்திலிருந்து மட்டுமல்ல பாதுகாப்பு கேமராக்களில் இருந்தும் மறைத்துவிடும்.

குறைந்த விலையில் கிடைக்குமாறு இந்த கோட் உருவாக்கப்படும்.பார்ப்பதற்கு எந்தவித வித்தியாசமும் இல்லாமல் காணப்படும் இந்த மேலாடை, செயற்கை நுண்ணறிவால் (AI) கண்காணிக்கப்படும். இதனால் இந்த கோட்டை அணிந்திருப்பவர்கள் பாதுகாப்பு கேமராக்களில் சிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனை சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. சீனாவில் பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்களின் இந்த இன்விஸ் டிஃபென்ஸ் (InvisDefense) கோட், மனிதர்களின் கண்களுக்குத் தெரியும், ஆனால் அதனுள் தொழில்நுட்பம் மாயமாய் மறைந்திருக்கிறது.

பகலில் கேமராக்களைக் குருடாக்கும் இந்த InvisDefense, இரவில் வெப்ப சமிக்ஞைகளை வெளியிடுகிறது. ஒரு போட்டியில் கலந்துக் கொண்ட சீன மாணவர்களின் புத்தாக்கமான இந்த மாய மேலாடைக்கு, போட்டி ஒன்றில் முதல் பரிசு கிடைத்துள்ளது. Huawei Technologies Co நிதியுதவி செய்த படைப்புப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

வுஹான் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியின் பேராசிரியர் வாங் ஜெங் மாணவர்களின் படைப்பாக்கத்தைப் பற்றி விரிவாக சொல்கிறார். “இப்போதெல்லாம் பல கண்காணிப்பு சாதனங்கள் மனித உடல்களை சுலபமாக கண்டறிந்துவிடுகின்றன.

சாலையில் உள்ள கேமராக்கள் பாதசாரிகளைக் கண்டறியும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் கார்கள் பாதசாரிகள், சாலைகள் மற்றும் தடைகளை அடையாளம் காண முடியும். எங்கள் இன்விஸ் டிஃபென்ஸ் ஆடை அணிந்திருக்கும்போது, கேமராவில் படம் பதியும் ஆனால் நீங்கள் மனிதரா என்பதை அது கண்டறிய முடியாது”.

பகலில், மனித உடல்களைக் கண்டறிய கேமராக்களால் விளிம்பு அங்கீகாரம் மற்றும் இயக்க அங்கீகாரம் (contour recognition and motion recognition) பயன்படுத்தப்படுகிறது.

InvisDefense இன் மேற்பரப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உருமறைப்பு வடிவத்தால் மூடப்பட்டிருக்கும், இது இயந்திர பார்வையின் அங்கீகார வழிமுறையில் குறுக்கிடுகிறது மற்றும் கேமராவை திறம்பட குருடாக்குகிறது, இதனால் கேமராக்களின் மனிதனை அடையாளம் காணும் நுட்பம் சரியாக வேலை செய்யாது.

இரவில், மனித உடல்களைக் கண்காணிக்க கேமராக்களால் அகச்சிவப்பு வெப்ப இமேஜிங் பயன்படுத்தப்படுகிறது. புத்தாக்கமான InvisDefense கோட்டின் உள் மேற்பரப்பில் ஒழுங்கற்ற வடிவ வெப்பநிலை-கட்டுப்பாட்டு தொகுதிகள் உள்ளன, அவை வெப்பநிலையின் அசாதாரண வடிவத்தை உருவாக்கி கேமராவை குழப்பும் என்பதால், இரவிலும் கேமராக்கள் ஏமாந்து போகும்.

"உருமறைப்பு வடிவத்தின் சமநிலை தான் மிகவும் கடினமான பகுதியாக இருந்தது. இயந்திர பார்வையில் தலையிட பிரகாசமான படங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கணினி பார்வையை முடக்கக்கூடிய குறைவான வெளிப்படையான வடிவங்களை வடிவமைக்க நாங்கள் அல்காரிதங்களைப் பயன்படுத்தினோம்" என்று இந்த புத்தாக்கப் படைப்பில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரும் PhD மாணவருமான வெய் ஹுய் கூறினார். நூற்றுக்கணக்கான வடிவங்களை உருவாக்கி, அவை பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் கேமராவின் கண்களை மறைக்கும் மாயஜால தொழில்நுட்பத்தை சீன மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.  



மந்திர ஆடையை வடிவமைத்த சீன மாணவர்கள்: ஆடைக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா உலகத்தில் இருந்து உங்களை மறைக்கும் ‘மந்திர ஆடை’ இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வந்துவிடும். இந்த சிறப்பு ஆடை உலகத்திலிருந்து மட்டுமல்ல பாதுகாப்பு கேமராக்களில் இருந்தும் மறைத்துவிடும்.குறைந்த விலையில் கிடைக்குமாறு இந்த கோட் உருவாக்கப்படும்.பார்ப்பதற்கு எந்தவித வித்தியாசமும் இல்லாமல் காணப்படும் இந்த மேலாடை, செயற்கை நுண்ணறிவால் (AI) கண்காணிக்கப்படும். இதனால் இந்த கோட்டை அணிந்திருப்பவர்கள் பாதுகாப்பு கேமராக்களில் சிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.இதனை சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. சீனாவில் பட்டப்படிப்பு படித்துவரும் மாணவர்களின் இந்த இன்விஸ் டிஃபென்ஸ் (InvisDefense) கோட், மனிதர்களின் கண்களுக்குத் தெரியும், ஆனால் அதனுள் தொழில்நுட்பம் மாயமாய் மறைந்திருக்கிறது.பகலில் கேமராக்களைக் குருடாக்கும் இந்த InvisDefense, இரவில் வெப்ப சமிக்ஞைகளை வெளியிடுகிறது. ஒரு போட்டியில் கலந்துக் கொண்ட சீன மாணவர்களின் புத்தாக்கமான இந்த மாய மேலாடைக்கு, போட்டி ஒன்றில் முதல் பரிசு கிடைத்துள்ளது. Huawei Technologies Co நிதியுதவி செய்த படைப்புப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.வுஹான் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பள்ளியின் பேராசிரியர் வாங் ஜெங் மாணவர்களின் படைப்பாக்கத்தைப் பற்றி விரிவாக சொல்கிறார். “இப்போதெல்லாம் பல கண்காணிப்பு சாதனங்கள் மனித உடல்களை சுலபமாக கண்டறிந்துவிடுகின்றன.சாலையில் உள்ள கேமராக்கள் பாதசாரிகளைக் கண்டறியும் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் கார்கள் பாதசாரிகள், சாலைகள் மற்றும் தடைகளை அடையாளம் காண முடியும். எங்கள் இன்விஸ் டிஃபென்ஸ் ஆடை அணிந்திருக்கும்போது, கேமராவில் படம் பதியும் ஆனால் நீங்கள் மனிதரா என்பதை அது கண்டறிய முடியாது”.பகலில், மனித உடல்களைக் கண்டறிய கேமராக்களால் விளிம்பு அங்கீகாரம் மற்றும் இயக்க அங்கீகாரம் (contour recognition and motion recognition) பயன்படுத்தப்படுகிறது.InvisDefense இன் மேற்பரப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உருமறைப்பு வடிவத்தால் மூடப்பட்டிருக்கும், இது இயந்திர பார்வையின் அங்கீகார வழிமுறையில் குறுக்கிடுகிறது மற்றும் கேமராவை திறம்பட குருடாக்குகிறது, இதனால் கேமராக்களின் மனிதனை அடையாளம் காணும் நுட்பம் சரியாக வேலை செய்யாது.இரவில், மனித உடல்களைக் கண்காணிக்க கேமராக்களால் அகச்சிவப்பு வெப்ப இமேஜிங் பயன்படுத்தப்படுகிறது. புத்தாக்கமான InvisDefense கோட்டின் உள் மேற்பரப்பில் ஒழுங்கற்ற வடிவ வெப்பநிலை-கட்டுப்பாட்டு தொகுதிகள் உள்ளன, அவை வெப்பநிலையின் அசாதாரண வடிவத்தை உருவாக்கி கேமராவை குழப்பும் என்பதால், இரவிலும் கேமராக்கள் ஏமாந்து போகும்."உருமறைப்பு வடிவத்தின் சமநிலை தான் மிகவும் கடினமான பகுதியாக இருந்தது. இயந்திர பார்வையில் தலையிட பிரகாசமான படங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், கணினி பார்வையை முடக்கக்கூடிய குறைவான வெளிப்படையான வடிவங்களை வடிவமைக்க நாங்கள் அல்காரிதங்களைப் பயன்படுத்தினோம்" என்று இந்த புத்தாக்கப் படைப்பில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரும் PhD மாணவருமான வெய் ஹுய் கூறினார். நூற்றுக்கணக்கான வடிவங்களை உருவாக்கி, அவை பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் கேமராவின் கண்களை மறைக்கும் மாயஜால தொழில்நுட்பத்தை சீன மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement