• May 09 2024

முல்லைத்தீவில் இருந்து கறுவாவினை ஏற்றுமதி செய்ய முடியும்...! விவசாயிகள் நம்பிக்கை..! samugammedia

Chithra / Jun 19th 2023, 11:33 am
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்திலும் கறுவா செய்கையினை மேற்கொள்வதற்கு சிறந்த மண் மற்றும் காலநிலை காணப்படுவதாக கறுவா ஆராச்சி  நிலையத்தினால் பரிந்துரை செய்துள்ளார்கள்.

இலங்கையின் வடக்கிலும் கறுவா செய்கையினை மேற்கொள்ளலாம் என கறுவா ஆராச்சி நிலையம் பரிந்துரைசெய்துள்ளது. 

முல்லைத்தீவு விவசாயிகளிற்கு கறுவா பயிரிடுதல் தொடர்பான ஆலோசனையும், பயிற்சி வகுப்பும் அவுஸ்ரெலியாவின் கறுவா ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. 

அவை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரத்தில் கறுவா பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவதற்கு உகந்த மண் காணப்படுவதால் அதனை பயிரிட முடியும் என  அவுஸ்ரெலியாவின் கறுவா ஆராய்ச்சி நிலையம்  தெரிவித்துள்ளது. 

அத்துடன், கறுவாவை நாற்று மேடை போடுவதற்கான செய்முறை விளக்கத்தினையும், அவற்றை நடுவது தொடர்பான விளக்கத்தினையும் செய்து காட்டினார்கள். 

அத்துடன் விதைகளையும் எமக்கு தந்துள்ளதுடன் அவற்றை பயிரிடுவதன் மூலம் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். 

இங்கு ஏனைய பகுதிகளிலும்  கறுவா மரங்கள் காணப்படுகின்றன. அவை சடைத்து நன்றாக வருவதை அவதானிக்க முடிகின்றது. 


அதன் மூலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கறுவா பயிர் ஷைக்கை வெற்றியளிப்பதற்கு வாய்ப்புள்ளது. 

அதனால், அனைத்து விவசாயிகளும் குறைந்தது 50 வீதமாவது கறுவா செடிகளை பயிரிட்டால் நல்ல லாபத்தினை ஈட்டிக்கொள்ள முடியும். 

அத்துடன் அவர்களால் வழங்கப்பட்ட பைகளில் கறுவா நாற்றினை போடுவதன் ஊடாக அதற்கு என்று தனியான இடத்தினை ஒதுக்கவும் தேவையில்லை.

தென்னங்காணிகளில் 4 அல்லது 5 அடிக்கு அவற்றை வைக்க முடியும். 

இந்த மாவட்டத்தில் இருக்கும் கறுவாவினை மக்கள் தமது சொந்த தேவைகளிற்காகவும்  மிதமானவற்றை விற்பனையும் செய்கின்றனர். 

இது ஒரு நல்ல திட்டமாக காணப்படுவதால் அனைவரும் சிந்தித்து செயற்பட்டதால் முல்லைத்தீவில் இருந்தே கறுவாவினை ஏற்றுமதி செய்கின்ற வாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவித்தனர்

முல்லைத்தீவில் இருந்து கறுவாவினை ஏற்றுமதி செய்ய முடியும். விவசாயிகள் நம்பிக்கை. samugammedia முல்லைத்தீவு மாவட்டத்திலும் கறுவா செய்கையினை மேற்கொள்வதற்கு சிறந்த மண் மற்றும் காலநிலை காணப்படுவதாக கறுவா ஆராச்சி  நிலையத்தினால் பரிந்துரை செய்துள்ளார்கள்.இலங்கையின் வடக்கிலும் கறுவா செய்கையினை மேற்கொள்ளலாம் என கறுவா ஆராச்சி நிலையம் பரிந்துரைசெய்துள்ளது. முல்லைத்தீவு விவசாயிகளிற்கு கறுவா பயிரிடுதல் தொடர்பான ஆலோசனையும், பயிற்சி வகுப்பும் அவுஸ்ரெலியாவின் கறுவா ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திரபுரத்தில் கறுவா பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவதற்கு உகந்த மண் காணப்படுவதால் அதனை பயிரிட முடியும் என  அவுஸ்ரெலியாவின் கறுவா ஆராய்ச்சி நிலையம்  தெரிவித்துள்ளது. அத்துடன், கறுவாவை நாற்று மேடை போடுவதற்கான செய்முறை விளக்கத்தினையும், அவற்றை நடுவது தொடர்பான விளக்கத்தினையும் செய்து காட்டினார்கள். அத்துடன் விதைகளையும் எமக்கு தந்துள்ளதுடன் அவற்றை பயிரிடுவதன் மூலம் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இங்கு ஏனைய பகுதிகளிலும்  கறுவா மரங்கள் காணப்படுகின்றன. அவை சடைத்து நன்றாக வருவதை அவதானிக்க முடிகின்றது. அதன் மூலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கறுவா பயிர் ஷைக்கை வெற்றியளிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனால், அனைத்து விவசாயிகளும் குறைந்தது 50 வீதமாவது கறுவா செடிகளை பயிரிட்டால் நல்ல லாபத்தினை ஈட்டிக்கொள்ள முடியும். அத்துடன் அவர்களால் வழங்கப்பட்ட பைகளில் கறுவா நாற்றினை போடுவதன் ஊடாக அதற்கு என்று தனியான இடத்தினை ஒதுக்கவும் தேவையில்லை.தென்னங்காணிகளில் 4 அல்லது 5 அடிக்கு அவற்றை வைக்க முடியும். இந்த மாவட்டத்தில் இருக்கும் கறுவாவினை மக்கள் தமது சொந்த தேவைகளிற்காகவும்  மிதமானவற்றை விற்பனையும் செய்கின்றனர். இது ஒரு நல்ல திட்டமாக காணப்படுவதால் அனைவரும் சிந்தித்து செயற்பட்டதால் முல்லைத்தீவில் இருந்தே கறுவாவினை ஏற்றுமதி செய்கின்ற வாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement