ஹட்டனில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் சாப்பிட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடப்பதாக உணவகத்தின் ஊழியர்களுக்கு குறித்த நபர், தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து வாடிக்கையாளர் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் உணவகத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்படி, உணவகத்தை அசுத்தமான முறையில் நடத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்ஓயா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.
ஹோட்டல் உணவில் கரப்பான் பூச்சி; கண்டுகொள்ளாத ஊழியர்கள் வாடிக்கையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை ஹட்டனில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் சாப்பிட்ட உணவில் இறந்த கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.உணவில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடப்பதாக உணவகத்தின் ஊழியர்களுக்கு குறித்த நபர், தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து வாடிக்கையாளர் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் உணவகத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.இதன்படி, உணவகத்தை அசுத்தமான முறையில் நடத்தியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்ஓயா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.