• May 19 2024

விவசாயிகளுக்கான நஷ்டஈடு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்- சபையில் இம்ரான் மகரூப் கோரிக்கை!SamugamMedia

Sharmi / Feb 23rd 2023, 9:15 pm
image

Advertisement

இப்போது விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள். நெல்லை கிலோ 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி ஊடகங்களில் கொள்வனவாளர்களிடம் சொல்கிறார். ஆனால் கொள்வனவாளர்கள் ரூபா 60 - 65 வரையிலேயே கொள்வனவு செய்கிறார்கள் இதனை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கான நஷ்டஈடை உடனடியாக வழங்க வேண்டும் என வியாழக்கிழமை (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சில அமைச்சர் கூறுகிறார்கள் நாங்கள் வந்த பிறகுதான் பெற்றோல் வரிசை, கேஸ் வரிசை குறைந்ததாக சொல்கிறார்கள். இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செய்த ஊழல்களால்தான் இந்ந நெருக்கடிக்கு முழுமையான காரணம் என்பதை மறந்துவிட்டு பேசுவது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  கடந்த காலங்களில் பெற்றோல், டீசல் விலைகள் ஒன்று, இரண்டு ரூபா அதிகரிக்கும் போது சைக்கிளில் பாராளுமன்றம் வந்தவர்கள் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தால் பாராளுமன்றத்திற்கு தவண்டு அல்லது உருண்டு அல்லது பிரண்டு அல்லவா வந்திருக்கிருக்க வேண்டும். எப்படி வந்தார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார். ஆளும் கட்சி உறுப்பினர்களது பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் பார்க்கும் போது வெட்கமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

விவசாயிகளுக்கான நஷ்டஈடு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்- சபையில் இம்ரான் மகரூப் கோரிக்கைSamugamMedia இப்போது விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள். நெல்லை கிலோ 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி ஊடகங்களில் கொள்வனவாளர்களிடம் சொல்கிறார். ஆனால் கொள்வனவாளர்கள் ரூபா 60 - 65 வரையிலேயே கொள்வனவு செய்கிறார்கள் இதனை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கான நஷ்டஈடை உடனடியாக வழங்க வேண்டும் என வியாழக்கிழமை (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது சில அமைச்சர் கூறுகிறார்கள் நாங்கள் வந்த பிறகுதான் பெற்றோல் வரிசை, கேஸ் வரிசை குறைந்ததாக சொல்கிறார்கள். இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செய்த ஊழல்களால்தான் இந்ந நெருக்கடிக்கு முழுமையான காரணம் என்பதை மறந்துவிட்டு பேசுவது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும்,  கடந்த காலங்களில் பெற்றோல், டீசல் விலைகள் ஒன்று, இரண்டு ரூபா அதிகரிக்கும் போது சைக்கிளில் பாராளுமன்றம் வந்தவர்கள் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தால் பாராளுமன்றத்திற்கு தவண்டு அல்லது உருண்டு அல்லது பிரண்டு அல்லவா வந்திருக்கிருக்க வேண்டும். எப்படி வந்தார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார். ஆளும் கட்சி உறுப்பினர்களது பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் பார்க்கும் போது வெட்கமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement