• Sep 10 2025

பாதாள உலக குழுவுடன் தொடர்பு - வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர் பட்டியல்

Chithra / Sep 9th 2025, 12:28 pm
image


பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பெயர்  பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதாள உலக கும்பல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கடந்த சில நாட்களாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க  திட்டமிட்டுள்ளார். 

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதாள உலக குழுவுடன் தொடர்பு - வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர் பட்டியல் பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பெயர்  பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாதாள உலக கும்பல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கடந்த சில நாட்களாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க  திட்டமிட்டுள்ளார். இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement