• Sep 22 2024

தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு...! ஊழியர்களின் விடுமுறை இரத்து...! வெளியான அறிவிப்பு...! samugammedia

Sharmi / Oct 5th 2023, 11:36 am
image

Advertisement

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில்  ரயில்வே துணை கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (05) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் உட்பட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நேற்று (04) இரவு தீர்மானித்துள்ளது.

செப்டெம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் கீழ் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத மற்றும் பொது போக்குவரத்து சேவைகளின் அனைத்து ஊழியர்களுக்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு. ஊழியர்களின் விடுமுறை இரத்து. வெளியான அறிவிப்பு. samugammedia ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில்  ரயில்வே துணை கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.இதன்படி, இன்று (05) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பிரதி கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ரயில் உட்பட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நேற்று (04) இரவு தீர்மானித்துள்ளது.செப்டெம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.இந்த வர்த்தமானி அறிவித்தலின் கீழ் பணிக்கு சமூகமளிக்காத புகையிரத மற்றும் பொது போக்குவரத்து சேவைகளின் அனைத்து ஊழியர்களுக்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement