காலி முகத்திடலில் இருந்த விசாலமான தேசியக் கொடி தொடர்பில் எழுந்த சர்ச்சை!

124

காலி முகத்திடலில் தினமும் ஏற்றப்பட்டு இருக்கும் இலங்கையின் விசாலமான தேசியக் கொடி இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்றப்பட்டு இருக்கவில்லை.

மேலும் வருடத்தின் 365 நாட்களும் ஏற்றப்பட்டு இருக்கும் குறித்த கொடி இன்று காலை ஏற்றப்படாமல் இருப்பது தொடர்பில் அனைவரது கவனமும் திரும்பியது.

அத்தோடு இது தொடர்பில் கருத்து தெரிவித்த விமானப்படை செய்தித் தொடர்பாளர்,

இன்று காலை வழக்கம் போல் காலி முகத்திடல் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாகவும் ஆனால் மழை காரணமாக சிறிது நேரத்தில் மீண்டும் இறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மழை பெய்யும் போது கொடிக் கம்பம் ஈரமாக இருப்பதால் தேசியக் கொடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமுன்று அவர் மேலும் கூறினார்.

அத்தோடு ஈரமான கம்பம் காய்ந்த பின் கொடியை மீண்டும் ஏற்றுவது இயல்பான நடைமுறை என்று அவர் மேலும் கூறினார்.இதேவேளை, தேசியக் கொடி மீண்டும் ஏற்றப்பட்டதாக விமானப்படை கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: