• Feb 23 2025

மன்னாரில் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பினர் ஏற்பாட்டில் ஆடை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

Thansita / Feb 22nd 2025, 9:07 am
image

மன்னாரில் இயங்கி வரும் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பினால்  நடத்தப்பட்டு வந்த தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த  மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் ஆடைக் கண்காட்சியும் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(21) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வானது  அடம்பன் கிராமத்தில் அமைந்துள்ள தையல் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பின் பணிப்பாளர் சக்தி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் , சிறப்பு விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச  செயலாளர் க.டெ.அரவிந்த ராஜ்  ஆகியோர் கலந்து கொண்டார்.

லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பினால் நடந்தப்பட்ட தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்ட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட  மாணவிகளுக்கு தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது .

மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பின் பணியாளர்களின் சேவையை பாராட்டி மதிப்பளிக்க பட்டார்கள்.

அத்துடன் நிகழ்விற்கு விருந்தினர்களாக வருகை தந்த அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கிராம சேவையாளர்கள் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மன்னாரில் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பினர் ஏற்பாட்டில் ஆடை கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும். மன்னாரில் இயங்கி வரும் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பினால்  நடத்தப்பட்டு வந்த தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த  மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் ஆடைக் கண்காட்சியும் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(21) மாலை நடைபெற்றது.இந்த நிகழ்வானது  அடம்பன் கிராமத்தில் அமைந்துள்ள தையல் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பின் பணிப்பாளர் சக்தி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் , சிறப்பு விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச  செயலாளர் க.டெ.அரவிந்த ராஜ்  ஆகியோர் கலந்து கொண்டார்.லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பினால் நடந்தப்பட்ட தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்ட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட  மாணவிகளுக்கு தையல் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது .மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் லட்சுமி கரங்கள் தொண்டு அமைப்பின் பணியாளர்களின் சேவையை பாராட்டி மதிப்பளிக்க பட்டார்கள்.அத்துடன் நிகழ்விற்கு விருந்தினர்களாக வருகை தந்த அதிதிகளுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் கிராம சேவையாளர்கள் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement