பெரும் ஆபத்தில் யாழ்ப்பாணம்? இன்று மட்டும் இவ்வளவு தொற்றுக்களா?

55

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பலருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 59 கொரோனா நோய்த் தொற்றுக்குள்லானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 51 கைதிகளும், யாழ் போதனா வைத்தியசாலையில் தாதி உட்பட நான்கு ஊழியர்களும், சங்கானையில் இருவரும் மற்றும் சண்டிலிப்பாய் கொடிகாமம் பகுதிகளில் தலா ஒருவருமென மொத்தம் 59பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி வட மாகாணத்தில் இன்று மட்டும் 62 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: