தம்பலகாமத்தில் பாதுகாப்பு பிரிவினருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றி வைப்பு

41

இலங்கையில் கொவிட்19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நாடு பூராகவும் இடம் பெற்று வருகின்றது.

சைனோபாம் தடுப்பூசி ஏற்றும் பணி தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இடம் பெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக நேற்று(10)தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் மற்றும் இரானுவத்தினர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மலர்விழி ரவிந்திரராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பொலிஸார் 142 பேருக்கும்,இரானுவத்தினர் 38 பேருக்கும் என மொத்தமாக 180 சைனோபாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தவிர 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமாக புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: