சீனாவிற்கு தாய்வானில் காத்திருக்கும் ஆபத்து!

தாய்வான் ஒரு சிறிய நாடு என அறியப்பட்டாலும் தாய்வானின் பல உற்பத்திகளை நம்பியே இன்றும் அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தாய்வானின் தொழிநுட்பத்துறை. அதில் தாய்வான் உற்பத்தி செய்கின்ற ‘குறை கடத்திகள்’ என அழைக்கப்படும் “மெமரி சிப்ஸ்” உலகின் இரண்டாவது நிலையில் இருக்கின்றது.

தாய்வானின் உற்பத்திகளை மையமாக வைத்தே தற்பொழுது அமெரிக்காவில் “சிப்ஸ்” ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இவ்வாறான தொழிநுட்ப உற்பத்திகளில் சீனா பலவீனமான நிலையிலே காணப்படுகின்றது. சீனா தாய்வான் மீது போர் தொடுக்கும் பட்சத்தில் தொழிநுட்ப ரீதியிலான மாற்று வழித் தாக்குதலை தாய்வான் சீனா மீது மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சீனாவிற்கு சர்வதேசம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைபர் தாக்குதல் எனப்படும் இணைவழி தாக்குதலை விட வேறு வடிவிலான தாக்குதல் முறைகளை தாய்வான் அறிமுகப்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை