• Nov 24 2024

உயர்தரப் பரீட்சை திகதி; மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

Chithra / Nov 7th 2024, 12:18 pm
image

 


2024 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும்,

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபாலில் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து நவம்பர் 18ஆம் திகதி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அனைத்து பரீட்சார்த்திகளும் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை திருத்தங்களைச் செய்யலாம் எனவும், பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை திகதி; மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.  2024 க.பொ.த உயர்தர பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும்,தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.தபாலில் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து நவம்பர் 18ஆம் திகதி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அனைத்து பரீட்சார்த்திகளும் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை திருத்தங்களைச் செய்யலாம் எனவும், பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement