ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் மீதான விவாதத்தை இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (25) நடைபெற்றது.
அங்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவும், அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
டிசம்பர் 3ஆம் திகதி முதல் பாராளுமன்ற வாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக இடைக்கால நியமக் கணக்கு தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நியமக் கணக்கு தொடர்பில் வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளதாக கட்சித் தலைவர்கள் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அரசு அலுவல்களை நடத்த இடைக்கால தரக் கணக்கில் இருந்து பணம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் குறித்து நாடாளுமன்றில் விவாதம். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் மீதான விவாதத்தை இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.அதன்படி, அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.நாடாளுமன்றத்தின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (25) நடைபெற்றது.அங்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவும், அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.டிசம்பர் 3ஆம் திகதி முதல் பாராளுமன்ற வாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.இதற்கு மேலதிகமாக இடைக்கால நியமக் கணக்கு தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இடைக்கால நியமக் கணக்கு தொடர்பில் வாக்கெடுப்புக்கு செல்லவுள்ளதாக கட்சித் தலைவர்கள் அங்கு குறிப்பிட்டுள்ளனர்.அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அரசு அலுவல்களை நடத்த இடைக்கால தரக் கணக்கில் இருந்து பணம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.