• Apr 30 2024

நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்தை மீண்டும் செயற்படுத்துமாறு கோரி காரை மக்களால் மகஜர் கையளிப்பு!samugammedia

Sharmi / Apr 6th 2023, 12:07 pm
image

Advertisement

காரைநகர்ப் பிரதேசபைக்குட்பட்ட பிரதேசங்களிள் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் பிரதேச சபை உட்பட பல்வேறு தரப்பும் மக்களுக்கான குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் உரிய சுகாதார நியமங்களுக்குமைய வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட விளான் பகுதியிலுள்ள நிறுவனத்துக்கு சொந்தமான கிணற்றிலிருந்து உரிய சட்டப் பிரமாணங்களுக்கு அமைய சுகாதார முறைப்படி  நீண்ட காலமாக குடிநீரை விநியோகித்து வந்த  EVERY DAYS குடிநீர்  விநியோக சேவை அமைப்பினருக்கு அண்மைய காலங்களில் நீரை விநியோகம் செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.



நீர் விநியோகிக்கப்படாமையால் பாதிப்படைந்த மக்கள் இன்று உதவிப் பிரதேச செயலரிடம் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மனுவொன்றை வழங்கினர்.

குறித்த மனுவை கையளிப்பதற்கு வந்த பொதுமக்களை நீ்ண்ட நேரம் காத்திருக்க வைத்ததுடன் ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

மனுவைக் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள்,

காரைநகர்ப் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயளாளர் நியமிக்கப்படாமையால் உதவி பிரதேச செயலரே நிர்வகி்த்து வரும் நிலையில் குறித்த பதவிக்கு தகுதியற்றவராக காணப்படுகின்றார் என குற்றஞ் சுமத்தினர்.

இதேவேளை தமது அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தை மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் காரைநகர்ப் பிரதேச செயலகத்திற்கு உரிய பிரதேச செயலகரை நியமிக்குமாறும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.



நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்தை மீண்டும் செயற்படுத்துமாறு கோரி காரை மக்களால் மகஜர் கையளிப்புsamugammedia காரைநகர்ப் பிரதேசபைக்குட்பட்ட பிரதேசங்களிள் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் பிரதேச சபை உட்பட பல்வேறு தரப்பும் மக்களுக்கான குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் உரிய சுகாதார நியமங்களுக்குமைய வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட விளான் பகுதியிலுள்ள நிறுவனத்துக்கு சொந்தமான கிணற்றிலிருந்து உரிய சட்டப் பிரமாணங்களுக்கு அமைய சுகாதார முறைப்படி  நீண்ட காலமாக குடிநீரை விநியோகித்து வந்த  EVERY DAYS குடிநீர்  விநியோக சேவை அமைப்பினருக்கு அண்மைய காலங்களில் நீரை விநியோகம் செய்யும் நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.நீர் விநியோகிக்கப்படாமையால் பாதிப்படைந்த மக்கள் இன்று உதவிப் பிரதேச செயலரிடம் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மனுவொன்றை வழங்கினர்.குறித்த மனுவை கையளிப்பதற்கு வந்த பொதுமக்களை நீ்ண்ட நேரம் காத்திருக்க வைத்ததுடன் ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.மனுவைக் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள்,காரைநகர்ப் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயளாளர் நியமிக்கப்படாமையால் உதவி பிரதேச செயலரே நிர்வகி்த்து வரும் நிலையில் குறித்த பதவிக்கு தகுதியற்றவராக காணப்படுகின்றார் என குற்றஞ் சுமத்தினர்.இதேவேளை தமது அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகத்தை மீள நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் காரைநகர்ப் பிரதேச செயலகத்திற்கு உரிய பிரதேச செயலகரை நியமிக்குமாறும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement