• Oct 13 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - 20 பேர் உயிரிழப்பு

Chithra / Oct 13th 2024, 10:53 am
image

Advertisement

  

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் தொடர்ந்தும் மேல் மாகாணத்தில் வசிப்பவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த மாகாணத்தில் 17,159 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஸ் என்னும் நுளம்பினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வீட்டின் சுற்றுசூழலில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் இந்த டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, அதீத களைப்பு, உடல் வலி, பசியின்மை மற்றும் உடல் அரிப்பு போன்ற டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - 20 பேர் உயிரிழப்பு   இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு நோயினால் தொடர்ந்தும் மேல் மாகாணத்தில் வசிப்பவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, குறித்த மாகாணத்தில் 17,159 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏடிஸ் என்னும் நுளம்பினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வீட்டின் சுற்றுசூழலில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் இந்த டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, அதீத களைப்பு, உடல் வலி, பசியின்மை மற்றும் உடல் அரிப்பு போன்ற டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement