• Nov 25 2024

பல்கலைக்கழக மாணவியின் உயிரைப் பறித்த டெங்கு...! தொடரும் சோகம்...!samugammedia

Sharmi / Jan 16th 2024, 10:00 pm
image

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.

மபுதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த யுவதிக்கு மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளில்  அவருக்கு டெங்கு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி இன்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவியின் உயிரைப் பறித்த டெங்கு. தொடரும் சோகம்.samugammedia டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.மபுதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது.இந்நிலையில், குறித்த யுவதிக்கு மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனைகளில்  அவருக்கு டெங்கு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி இன்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement