• Feb 15 2025

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க

Thansita / Feb 15th 2025, 7:00 am
image

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலமைகளை கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க நேற்றையய தினம்  நேரில் சென்று பார்வையிட்டதுடன் நோயாளர்களுடனும் கலந்துரையாடினார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வைத்திய கலாநிதி உமாசங்கர் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார்.

மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் ஆண் , பெண் விடுதி பற்றாக்குறை தொடர்பிலும் நோயாளர்கள் அவதியுறும் நிலமைகள் தொடர்பிலும் நேரில் பார்வையிட்ட பிரதி அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் தற்காலிக தீர்வாக சிலவற்றை ஏற்படுத்தித் தருவதாகவும் நிரந்தர தீர்வாக எதிர்காலத்தில் உரியவர்களுடன் கலந்துரையாடி பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன், வைத்தியர்கள், மற்றும் பிதி அமைச்சரின் இணைப்பாளர்கள் முதலானோர் இணைந்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலமைகளை கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க நேற்றையய தினம்  நேரில் சென்று பார்வையிட்டதுடன் நோயாளர்களுடனும் கலந்துரையாடினார்.இதன்போது முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வைத்திய கலாநிதி உமாசங்கர் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார்.மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் ஆண் , பெண் விடுதி பற்றாக்குறை தொடர்பிலும் நோயாளர்கள் அவதியுறும் நிலமைகள் தொடர்பிலும் நேரில் பார்வையிட்ட பிரதி அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் தற்காலிக தீர்வாக சிலவற்றை ஏற்படுத்தித் தருவதாகவும் நிரந்தர தீர்வாக எதிர்காலத்தில் உரியவர்களுடன் கலந்துரையாடி பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் உறுதியளித்தார்.இந்த விஜயத்தின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.திலகநாதன், எம்.ஜெகதீஸ்வரன், வைத்தியர்கள், மற்றும் பிதி அமைச்சரின் இணைப்பாளர்கள் முதலானோர் இணைந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement