• Apr 20 2024

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் அழிப்பு: ஆறு.திருமுருகன் கண்டனம்!samugammedia

Sharmi / Mar 27th 2023, 11:27 am
image

Advertisement

வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர்  ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன்,  பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளதுடன் சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்களை உடைத்துள்ளமை கண்டனத்துக்குரியது.

சைவமக்களின் தொன்மைகளை அழிக்கும் செயற்பாடு தொடர்கிறது. இது திட்டமிட்டு நடைபெறுகிறது. அரசாங்கம் இத்தகை செயல்களை நிறுத்த வேண்டும்.தொல்லியல் திணைக்களம் ஆதி சைவக் கோவில்களை சைவமக்கள் பராமரிப்பதற்கு தொடர்ந்து இடையூறு செய்வதும் வேதனைக்குரியது.

இலங்கையின் ஜனாதிபதி, விக்கிரகங்களை உடைத்தமை குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலயத் திருப்பணி நடைபெறுவதற்கு இந்து கலாச்சாரத் திணக்களம் உரிய அனுமதிகளை வழங்க வேண்டும்.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொடர்ந்து சைவசமயத்துக்கு வரும் இன்னல்களை போக்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் அழிப்பு: ஆறு.திருமுருகன் கண்டனம்samugammedia வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் உள்ள ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர்  ஆலயத்தில் மலை உச்சியில் காணப்பட்ட சிவலிங்கம் அருகிலுள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சூலங்கள் மற்றும் அம்மன்,  பிள்ளையார் சிலைகளும் காணாமல் போயுள்ளதுடன் சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுவெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்திலுள்ள விக்கிரகங்களை உடைத்துள்ளமை கண்டனத்துக்குரியது.சைவமக்களின் தொன்மைகளை அழிக்கும் செயற்பாடு தொடர்கிறது. இது திட்டமிட்டு நடைபெறுகிறது. அரசாங்கம் இத்தகை செயல்களை நிறுத்த வேண்டும்.தொல்லியல் திணைக்களம் ஆதி சைவக் கோவில்களை சைவமக்கள் பராமரிப்பதற்கு தொடர்ந்து இடையூறு செய்வதும் வேதனைக்குரியது.இலங்கையின் ஜனாதிபதி, விக்கிரகங்களை உடைத்தமை குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலயத் திருப்பணி நடைபெறுவதற்கு இந்து கலாச்சாரத் திணக்களம் உரிய அனுமதிகளை வழங்க வேண்டும்.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.தொடர்ந்து சைவசமயத்துக்கு வரும் இன்னல்களை போக்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement