2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி தொடங்கிய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடைவடிக்கையின் கீழ்,
நேற்று முன்தினம் (07) மாலை 4.15 மணி வரை 168 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த 168 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 57 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி தொடங்கிய கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடைவடிக்கையின் கீழ், நேற்று முன்தினம் (07) மாலை 4.15 மணி வரை 168 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த 168 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 57 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.