• Oct 30 2024

யாழில் இடம்பெற்ற நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு..!

Sharmi / Oct 29th 2024, 5:46 pm
image

Advertisement

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவினரும் யாழ் நீரிழிவு கழகத்தினரும் இணைந்து முன்னெடுத்த நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு இன்றையதினம்(29) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

யாழ் நீரிழிவு கழக செயலாளர் க.கணபதி தலைமையில் நடைபெற்ற விழிப்பூட்டல் செயலமர்வில்,   "நீரிழிவு வராதிருக்க கடைப்பிடிக்க வேண்டிய உணவு கட்டுப்பாடுகள்"  குறித்து  யாழ் பல்கலைக் கழக கல்லூரி பணிப்பாளர் Dr.விஜிதா விளக்கமளித்தார்.

தொடர்ந்து "நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புக்களும் அதனை தடுப்பதற்கான வழிவகைகள்" பற்றியும் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் அரவிந்தனால் சிறப்புரை ஆற்றப்பட்டது.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்தினர் கலந்து கொண்டனர்.







 

யாழில் இடம்பெற்ற நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு. உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவினரும் யாழ் நீரிழிவு கழகத்தினரும் இணைந்து முன்னெடுத்த நீரிழிவு விழிப்பூட்டல் செயலமர்வு இன்றையதினம்(29) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.யாழ் நீரிழிவு கழக செயலாளர் க.கணபதி தலைமையில் நடைபெற்ற விழிப்பூட்டல் செயலமர்வில்,   "நீரிழிவு வராதிருக்க கடைப்பிடிக்க வேண்டிய உணவு கட்டுப்பாடுகள்"  குறித்து  யாழ் பல்கலைக் கழக கல்லூரி பணிப்பாளர் Dr.விஜிதா விளக்கமளித்தார்.தொடர்ந்து "நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புக்களும் அதனை தடுப்பதற்கான வழிவகைகள்" பற்றியும் யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் அரவிந்தனால் சிறப்புரை ஆற்றப்பட்டது.இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாழ் நீரிழிவுக் கழகத்தினர் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement