• Jul 27 2024

டயானா கமகேவின் வழக்கு – சிஐடிக்கு வழங்கப்பட்ட உத்தரவு SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 1:48 pm
image

Advertisement

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு ஆணையாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்த வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயானா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்க முடியுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

குறித்த மனுவை ஏப்ரல் 6-ம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

டயானா கமகேவின் வழக்கு – சிஐடிக்கு வழங்கப்பட்ட உத்தரவு SamugamMedia இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு ஆணையாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.அந்த வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் டயானா கமகேவைக் கைது செய்வதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்க முடியுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.குறித்த மனுவை ஏப்ரல் 6-ம் திகதி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

Advertisement