• May 18 2024

டீசல் விலை குறைந்தது; பஸ் கட்டணம் குறைக்கப்படுமா?

Chithra / Dec 6th 2022, 8:24 am
image

Advertisement


டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

டீசல் விலை கணிசமான அளவு குறைக்கப்படாததால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்

நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

லங்கா IOC நிறுவனமும் டீசலின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.

டீசல் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். 

டீசல் விலை குறைந்தது; பஸ் கட்டணம் குறைக்கப்படுமா டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.டீசல் விலை கணிசமான அளவு குறைக்கப்படாததால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.லங்கா IOC நிறுவனமும் டீசலின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.டீசல் விலை குறைவினால் பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement