• May 19 2024

இலங்கையில் நிபந்தனைகளுடனேயே தமிழர்களுக்கு முதலீடு!

Chithra / Dec 6th 2022, 8:19 am
image

Advertisement

இலங்கையில் எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்னதாக, அரசியல் தீர்வு மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் தொடர்பில் நீதிக்கான உத்தரவாதம் ஆகியவை அவசியம் என கனடாவை தளமாகக்கொண்ட, உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் புலம்பெயர்ந்தோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டுமாயின், நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

1) இலங்கையின் பிணையெடுப்பிற்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் கண்டிப்பாக நிபந்தனையுடன் இருக்க வேண்டும். அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் நிலையை தீர்மானிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு, சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை உள்ளடக்கவேண்டும்.

2. இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு, கனடாவில் கியூபெக், இங்கிலாந்தில் உள்ள ஸ்கொட்லாந்து அல்லது சுவிஸ் கூட்டமைப்பு போன்ற கூட்டாட்சித் தீர்வு இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை போன்று அமையவேண்டும்.

4. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்ட கலப்பு நீதிமன்றத்தை சர்வதேச சமூகம் அமுல்படுத்த வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் நிபந்தனைகளுடனேயே தமிழர்களுக்கு முதலீடு இலங்கையில் எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்னதாக, அரசியல் தீர்வு மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் தொடர்பில் நீதிக்கான உத்தரவாதம் ஆகியவை அவசியம் என கனடாவை தளமாகக்கொண்ட, உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.அதில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் புலம்பெயர்ந்தோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டுமாயின், நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்று தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது.1) இலங்கையின் பிணையெடுப்பிற்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் கண்டிப்பாக நிபந்தனையுடன் இருக்க வேண்டும். அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் நிலையை தீர்மானிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு, சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்களின் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை உள்ளடக்கவேண்டும்.2. இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு, கனடாவில் கியூபெக், இங்கிலாந்தில் உள்ள ஸ்கொட்லாந்து அல்லது சுவிஸ் கூட்டமைப்பு போன்ற கூட்டாட்சித் தீர்வு இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை போன்று அமையவேண்டும்.4. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்ட கலப்பு நீதிமன்றத்தை சர்வதேச சமூகம் அமுல்படுத்த வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு கேட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement