• Jul 10 2025

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்!

shanuja / Jul 9th 2025, 7:47 pm
image

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் துறைசார் கூட்டம், திருகோணமலை தலைமைச் செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில்  இன்று (09) நடைபெற்றது. 


இதில், அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களான மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம், மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, மாகாண கட்டிடங்கள் திணைக்களம் மற்றும் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் முன்னேற்ற மதிப்பாய்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.


கிழக்கு மாகாண பிரதான செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் கட்டுமானம், வீடமைப்பு, கிராமப்புற மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் திரு.பி.தயானந்தன் மற்றும் அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் துறைசார் கூட்டம், திருகோணமலை தலைமைச் செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில்  இன்று (09) நடைபெற்றது. இதில், அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களான மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம், மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, மாகாண கட்டிடங்கள் திணைக்களம் மற்றும் மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் முன்னேற்ற மதிப்பாய்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.கிழக்கு மாகாண பிரதான செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் கட்டுமானம், வீடமைப்பு, கிராமப்புற மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் திரு.பி.தயானந்தன் மற்றும் அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement