மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக சிவனடி பாத மலைக்கு செல்லும் உல்லாசப் பயணிகள் தற்போதைய காலநிலையில் மலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான படிக்கட்டுகளில் அதிகளவில் மலை உச்சியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் வடிந்து வருவதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் சிவனடி பாத மலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் சியத்தகங்குல ஓயா வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவனடி பாத மலைக்கு செல்ல வேண்டாம் – பொலிஸார் அவசர எச்சரிக்கை மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறிப்பாக சிவனடி பாத மலைக்கு செல்லும் உல்லாசப் பயணிகள் தற்போதைய காலநிலையில் மலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான படிக்கட்டுகளில் அதிகளவில் மலை உச்சியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் வடிந்து வருவதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.ஆகையால் சிவனடி பாத மலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் சியத்தகங்குல ஓயா வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.