எதிர்காலத்தில் வைத்தியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக்குக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த வேதன அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந் நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் வேதனம் அதிகரிப்படும்; தொழிற்சங்க போராட்டத்தை அனுமதிக்க முடியாது – சுகாதார அமைச்சர் அறிவிப்பு எதிர்காலத்தில் வைத்தியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதன்படி, வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக்குக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த வேதன அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி செலுத்துவதில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந் நிலையில், பொதுமக்களை பாதிக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்தியர்கள் ஆரம்பிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.