• May 18 2024

வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாட்டிற்கு குடிசன மதிப்பீடு தேவையா?..! சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி..!samugammedia

Sharmi / Jul 11th 2023, 4:49 pm
image

Advertisement

நாட்டினை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலையில் குடிசன மதிப்பீடு செய்யப்படுவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என  ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் முழு குடிசன மதிப்பீடு செய்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அந்த மதிப்பீட்டை செய்வதற்கு பல்லாயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள் தேவை.

குடிசன மதிப்பீடு என்று செய்யும் பொழுது வெறுமனே, குடும்பங்களின் எண்ணிக்கை மாத்திரமன்றி, பல்வேறுபட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அது அமையும்.

எதிர்காலத்தின் திட்டமிடல்கள், அபிவிருத்தி போன்றன இதன் இந்த குடிசன  மதிப்பீட்டின்அடிப்படையிலே மேற்கொள்ளப்படும்.

உள்நாட்டு கடன் மற்றும் வெளிநாட்டு கடனினை செலுத்த முடியாது கால அவகாசம் கேட்டுள்ள நாட்டில், குடிசன மதிப்பீட்டை செய்வதற்கான பெருந்தொகை பணம் அரசாகத்திடம் உள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது.

இந்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டியிருந்த சூழலில், பல கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் பல கோடி ரூபாயினை டிப்போர்ஸிராக கொடுத்து அதனை நடத்துமாறு கேட்டிருந்தது. ஆயினும் நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் உள்ளதாக கூறி இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாராளுமன்றத்தில் பழைய உள்ளுராட்சிமன்றங்களை மீண்டும், இயங்க வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான, காரணிகளை கூறும் அரசாங்கம் பெருமளவான தொகையை செலவு செய்து குடிசன மதிப்பீட்டை செய்ய கூடிய நிலையில் இருக்கின்றதா? அத்துடன் இந்த தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனாதிபதி, வரும் வருடம் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலை வைப்பதற்கு அவர் விரும்புகின்றார்.

ஜனாதிபதியை பொறுத்த மட்டில் அவர் மீளவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக வர வேண்டும். ஆனால், அவர் வருவதும், விடுவதும் மக்களின் முடிவு.

நாட்டில் நடக்க வேண்டிய தேர்தலை கால வரையறையின்றி ஒத்தி வைப்பதும், அதனை நடத்த முடியாதென ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பது என்பதான செயற்பாடு ஏற்றுக்கொள்ள மாட்டாது.

உள்ளுராட்சி தேர்தல் மட்டுமன்றி, மாகாணசபை தேர்தலும் 5 வருடமாக நடத்தப்படவில்லை, தனக்கு தேவையான புதிய ஆளுநர்கள் கொண்டுவரப்படுகின்றார்களே தவிர மாகாணசபை தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தவே அரசாங்கம் அஞ்சுகின்றது.

இவ்வாறாக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே ரணில் அரசாங்கம் செய்கிறது. அந்த வகையில், இது வெறுமனே குடிசன மதிப்பீடு மட்டுமா? தான் வெல்வதற்கான சாத்தியபாட்டினை அறிவதற்கான முயற்சியா?  அல்லது பல கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதா? என்ற கேள்விகள் பல உள்ளன.

குடிசன மதிப்பீடு உலக நாடுகளில் நடப்பது இயல்பு. ஆனால் பொருளாதாரத்தில் தலையெடுக்க முடியாத இலங்கை போன்ற நாட்டிற்கு இது தேவையானதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாட்டிற்கு குடிசன மதிப்பீடு தேவையா. சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி.samugammedia நாட்டினை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலையில் குடிசன மதிப்பீடு செய்யப்படுவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என  ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் முழு குடிசன மதிப்பீடு செய்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அந்த மதிப்பீட்டை செய்வதற்கு பல்லாயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள் தேவை. குடிசன மதிப்பீடு என்று செய்யும் பொழுது வெறுமனே, குடும்பங்களின் எண்ணிக்கை மாத்திரமன்றி, பல்வேறுபட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அது அமையும். எதிர்காலத்தின் திட்டமிடல்கள், அபிவிருத்தி போன்றன இதன் இந்த குடிசன  மதிப்பீட்டின்அடிப்படையிலே மேற்கொள்ளப்படும். உள்நாட்டு கடன் மற்றும் வெளிநாட்டு கடனினை செலுத்த முடியாது கால அவகாசம் கேட்டுள்ள நாட்டில், குடிசன மதிப்பீட்டை செய்வதற்கான பெருந்தொகை பணம் அரசாகத்திடம் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. இந்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டியிருந்த சூழலில், பல கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் பல கோடி ரூபாயினை டிப்போர்ஸிராக கொடுத்து அதனை நடத்துமாறு கேட்டிருந்தது. ஆயினும் நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் உள்ளதாக கூறி இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பாராளுமன்றத்தில் பழைய உள்ளுராட்சிமன்றங்களை மீண்டும், இயங்க வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான, காரணிகளை கூறும் அரசாங்கம் பெருமளவான தொகையை செலவு செய்து குடிசன மதிப்பீட்டை செய்ய கூடிய நிலையில் இருக்கின்றதா அத்துடன் இந்த தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனாதிபதி, வரும் வருடம் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலை வைப்பதற்கு அவர் விரும்புகின்றார். ஜனாதிபதியை பொறுத்த மட்டில் அவர் மீளவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக வர வேண்டும். ஆனால், அவர் வருவதும், விடுவதும் மக்களின் முடிவு. நாட்டில் நடக்க வேண்டிய தேர்தலை கால வரையறையின்றி ஒத்தி வைப்பதும், அதனை நடத்த முடியாதென ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பது என்பதான செயற்பாடு ஏற்றுக்கொள்ள மாட்டாது. உள்ளுராட்சி தேர்தல் மட்டுமன்றி, மாகாணசபை தேர்தலும் 5 வருடமாக நடத்தப்படவில்லை, தனக்கு தேவையான புதிய ஆளுநர்கள் கொண்டுவரப்படுகின்றார்களே தவிர மாகாணசபை தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தவே அரசாங்கம் அஞ்சுகின்றது. இவ்வாறாக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே ரணில் அரசாங்கம் செய்கிறது. அந்த வகையில், இது வெறுமனே குடிசன மதிப்பீடு மட்டுமா தான் வெல்வதற்கான சாத்தியபாட்டினை அறிவதற்கான முயற்சியா  அல்லது பல கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதா என்ற கேள்விகள் பல உள்ளன. குடிசன மதிப்பீடு உலக நாடுகளில் நடப்பது இயல்பு. ஆனால் பொருளாதாரத்தில் தலையெடுக்க முடியாத இலங்கை போன்ற நாட்டிற்கு இது தேவையானதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement