• Oct 05 2024

இலங்கை கரையை நோக்கி படையெடுக்கும் திமிங்கலங்கள்!

Chithra / Feb 11th 2023, 1:39 pm
image

Advertisement

கற்பிட்டி கண்டகுழி கடலில் இன்று அதிகாலை திடீரென திமிங்கலஙகள் கரையொதிங்கிய நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன.

புத்தளம் கட்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலஙகள் உயிருடன்  கரையொதிஙகியுள்ளன. இந்த நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதிங்கிய திமிங்கலங்களை கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் கடலுக்குள் மீண்டும் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். 

இதன்போது திமிங்களங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த 3 திமிங்கலங்களங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட  உள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த திமிங்கலம் (Filet  Whale) பைலட் வேல் என அழைக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அன்மையில் கற்பிட்டி தழுவ பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இனைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்ப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

இலங்கை கரையை நோக்கி படையெடுக்கும் திமிங்கலங்கள் கற்பிட்டி கண்டகுழி கடலில் இன்று அதிகாலை திடீரென திமிங்கலஙகள் கரையொதிங்கிய நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன.புத்தளம் கட்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலஙகள் உயிருடன்  கரையொதிஙகியுள்ளன. இந்த நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு கரையொதிங்கிய திமிங்கலங்களை கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் கடலுக்குள் மீண்டும் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன்போது திமிங்களங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்தனர்.இந்த நிலையில் உயிரிழந்த 3 திமிங்கலங்களங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட  உள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்த திமிங்கலம் (Filet  Whale) பைலட் வேல் என அழைக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.அன்மையில் கற்பிட்டி தழுவ பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இனைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்ப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement