• Sep 08 2024

நல்லதொரு சந்தர்ப்பத்தைக் குழப்பியடிக்க வேண்டாம்! - தமிழ்க் கட்சிகளிடம் மஹிந்த வேண்டுகோள் samugammedia

Chithra / Jun 11th 2023, 7:11 am
image

Advertisement

ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வைக் காணும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார். இதற்கு அரசின் பிரதான பங்காளிக் கட்சியான பெரமுன முழு ஆதரவை வழங்குகின்றது. ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளன.

இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சக்திகளின் நிழ்ச்சி நிரலில் செயற்பட்டால் இங்கு எல்லாம் குழப்பத்தில்தான் முடியும்." - என்றார்.

நல்லதொரு சந்தர்ப்பத்தைக் குழப்பியடிக்க வேண்டாம் - தமிழ்க் கட்சிகளிடம் மஹிந்த வேண்டுகோள் samugammedia ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வைக் காணும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார். இதற்கு அரசின் பிரதான பங்காளிக் கட்சியான பெரமுன முழு ஆதரவை வழங்குகின்றது. ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளன.இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சக்திகளின் நிழ்ச்சி நிரலில் செயற்பட்டால் இங்கு எல்லாம் குழப்பத்தில்தான் முடியும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement