மருந்துகளுக்கு அடுத்த வருடம் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில்,
உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நோயாளிகளுக்கு தரமான நம்பகமான மருந்துகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும், இதனை அடைவதற்கு தங்களால் இயன்றதைச் செய்வதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் 49 உள்ளுர் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மருந்துகள் உட்பட 454 மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் கடந்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
முடிவுக்கு வந்த மருந்துத் தட்டுப்பாடு - புதிய அமைச்சர் எடுத்த நடவடிக்கை மருந்துகளுக்கு அடுத்த வருடம் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அண்மையில் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறக்கூடிய மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.நோயாளிகளுக்கு தரமான நம்பகமான மருந்துகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும், இதனை அடைவதற்கு தங்களால் இயன்றதைச் செய்வதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.சுகாதார அமைச்சினால் 49 உள்ளுர் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மருந்துகள் உட்பட 454 மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் கடந்த மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.