• May 07 2025

போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்! 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

Chithra / Feb 11th 2025, 1:22 pm
image

 

போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறான உத்தியோகத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருளை பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் பாவனையில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மன்னிப்போ அல்லது இரண்டாவது வாய்ப்போ வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்தார். 

அதன்படி, 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் ஏனையவை தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது.

பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 03 T -56 ரக துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 04 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு  போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார்.போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.அவ்வாறான உத்தியோகத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருளை பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.போதைப்பொருள் பாவனையில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மன்னிப்போ அல்லது இரண்டாவது வாய்ப்போ வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார். மேலும் நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கே.புத்திக மனதுங்க தெரிவித்தார். அதன்படி, 07 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன் ஏனையவை தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது.பாதாள உலக கும்பல்களின் தலைமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 03 T -56 ரக துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 04 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now