• Nov 24 2024

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடல்தொழிலாளர்களை மீட்க முயற்சி - மத்திய அரசு தெரிவிப்பு...!samugammedia

Anaath / Dec 23rd 2023, 4:02 pm
image

இலங்கை கடல் படையினரால்  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மேல் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவைத்தாவது, 

கடந்த 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 31 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு விசாரணையின் போதே மத்திய அரசாங்கம் இந்த பதிலை வழங்கியுள்ளது. 

குறித்த இதே வேளை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் தங்களின் பாரம்பரிய உரிமைகளைப் பயன்படுத்தும், தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இலங்கையின் கடற்படையினர் பறிக்கிறார்கள் எனவும் அவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வலைகள் இலங்கை கடற்படையினரால் அழிக்கப்படுகின்றன எனவும் கடந்த 34 வருடங்களாக இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் மனுதாரர் வாதியிட்டார்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடல்தொழிலாளர்களை மீட்க முயற்சி - மத்திய அரசு தெரிவிப்பு.samugammedia இலங்கை கடல் படையினரால்  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மேல் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவைத்தாவது, கடந்த 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 31 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு விசாரணையின் போதே மத்திய அரசாங்கம் இந்த பதிலை வழங்கியுள்ளது. குறித்த இதே வேளை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் தங்களின் பாரம்பரிய உரிமைகளைப் பயன்படுத்தும், தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இலங்கையின் கடற்படையினர் பறிக்கிறார்கள் எனவும் அவர்களின் படகுகள் கைப்பற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வலைகள் இலங்கை கடற்படையினரால் அழிக்கப்படுகின்றன எனவும் கடந்த 34 வருடங்களாக இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் மனுதாரர் வாதியிட்டார்

Advertisement

Advertisement

Advertisement