• Oct 25 2024

முட்டையின் விலை குறையும் சாத்தியம்!

Tamil nila / Oct 24th 2024, 8:44 pm
image

Advertisement

முட்டையின் விலை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

 முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார். 

 வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, தற்போது சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்தார். 

 

முட்டையின் விலை குறையும் சாத்தியம் முட்டையின் விலை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.  முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.  வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, தற்போது சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement