• Nov 06 2024

குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Jun 20th 2024, 11:58 am
image

Advertisement

 

பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் 8 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை  இடம்பெற்றுள்ளது.

மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பாதிக்கப்பட்ட  8 பெண் தொழிலாளர்களுள் 6 பேர்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு,

மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எகே.ஜெயசூரிய தெரிவித்தார்



குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி  பொகவந்தலாவ - கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் 8 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட இரண்டாம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று காலை  இடம்பெற்றுள்ளது.மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட  8 பெண் தொழிலாளர்களுள் 6 பேர்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதோடு,மேலும் இரண்டு பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எகே.ஜெயசூரிய தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement