வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு புணானையில் வயோதிபர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது
மண்டுர் பிரதேசத்தை சேர்ந்தவரும் தொழில் நிமித்தம் ஓமடியாமடுவில் வசித்து வந்தவருமான 63 வயதான செல்லையா சுந்தரலிங்கம் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்த இரவு உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து அதனை விலக்கச் சென்றபோது தலையின் மீது மேற்கொள்ளப்பட்ட பலமான தாக்குதலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.சடலம் உடற்கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஓட்டமாடி அக்கீல் அவசரசேவைப் பிரிவினரின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.குறித்த வாகரை பிரதேச எல்லைக் கிராமமான ஓமடியாமடுவில் இவ்வாறான உயிரிழப்புச்சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொல்லால் தாக்கப்பட்டு வயோதிபர் உயிரிழப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு புணானையில் வயோதிபர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது மண்டுர் பிரதேசத்தை சேர்ந்தவரும் தொழில் நிமித்தம் ஓமடியாமடுவில் வசித்து வந்தவருமான 63 வயதான செல்லையா சுந்தரலிங்கம் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்த இரவு உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து அதனை விலக்கச் சென்றபோது தலையின் மீது மேற்கொள்ளப்பட்ட பலமான தாக்குதலால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.சடலம் உடற்கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஓட்டமாடி அக்கீல் அவசரசேவைப் பிரிவினரின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.குறித்த வாகரை பிரதேச எல்லைக் கிராமமான ஓமடியாமடுவில் இவ்வாறான உயிரிழப்புச்சம்பவங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.