• May 18 2024

மின்கட்டண அதிகரிப்பு - மக்களுடன் வீதிக்கு இறங்கப்போவதாக எதிர்க்கட்சி எச்சரிக்கை!

Chithra / Jan 10th 2023, 6:40 pm
image

Advertisement

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து ஜக்கிய மக்கள் சக்தி வீதிக்கு இறக்கி மக்களுடன் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஹரிசன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் அண்மைக்காலமாக பொய்யான தகவல்களை வழங்கியிருந்தது. ஜப்பான் அரசாங்கம் புதிய ஆண்டில் நிதியுதவி வழங்கபோவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். சீனாவிலிருந்து நிதியுதவி கிடைப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் ரணில் பதவியேற்று 6 மாதங்கள் கடந்து விட்ட போதும் எந்த சர்வதேச நாடுகளும் உதவிகளை வழங்க முன்வரவில்லை.

மின்சாரத்துறை தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி வருகின்றது. நட்டம் ஏற்படுகின்றது என்றால் அதனை ஈடுகட்ட ஒரு முறையான திட்டம் அவர்களிடம் இல்லை. மின்சார விரையத்தை குறைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை.  

பழைய நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கும் எந்த திட்டமும் இல்லை. இந்த நிலையில் மின்சார கட்டத்தை அதிகரித்து அரசு அறிவிக்கின்றது.

இதற்கு எதிராக நாம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். பொதுமக்களுக்கு தொடர்ந்து சுமை ஏற்படுகிறது.

சமயத்தலங்களுக்கு மின்கட்டணம் கட்ட முடியாமல் போகும் நிலை ஏற்படும். சமயதலங்களுக்கு தனி சோலார் பேனல்கள் வழங்கப்படும் என அரசு கூறியது, இதுவரை எந்த கோவிலுக்கும் கொடுத்ததாக நாங்கள் பார்க்கவில்லை.

அதேபோன்று அரசாங்கத்தின் அமைச்சர்களும் ஊடகங்களுக்கு வந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குகின்றோம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இன்று அவ்வாறான நிவாரணங்களை நாம் காணவில்லை.

மின்கட்டண அதிகரிப்பு - மக்களுடன் வீதிக்கு இறங்கப்போவதாக எதிர்க்கட்சி எச்சரிக்கை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து ஜக்கிய மக்கள் சக்தி வீதிக்கு இறக்கி மக்களுடன் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஹரிசன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அரசாங்கம் அண்மைக்காலமாக பொய்யான தகவல்களை வழங்கியிருந்தது. ஜப்பான் அரசாங்கம் புதிய ஆண்டில் நிதியுதவி வழங்கபோவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். சீனாவிலிருந்து நிதியுதவி கிடைப்பதாக தெரிவித்தனர்.ஆனால் ரணில் பதவியேற்று 6 மாதங்கள் கடந்து விட்ட போதும் எந்த சர்வதேச நாடுகளும் உதவிகளை வழங்க முன்வரவில்லை.மின்சாரத்துறை தொடர்ந்து கட்டணங்களை உயர்த்தி வருகின்றது. நட்டம் ஏற்படுகின்றது என்றால் அதனை ஈடுகட்ட ஒரு முறையான திட்டம் அவர்களிடம் இல்லை. மின்சார விரையத்தை குறைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை.  பழைய நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கும் எந்த திட்டமும் இல்லை. இந்த நிலையில் மின்சார கட்டத்தை அதிகரித்து அரசு அறிவிக்கின்றது.இதற்கு எதிராக நாம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். பொதுமக்களுக்கு தொடர்ந்து சுமை ஏற்படுகிறது.சமயத்தலங்களுக்கு மின்கட்டணம் கட்ட முடியாமல் போகும் நிலை ஏற்படும். சமயதலங்களுக்கு தனி சோலார் பேனல்கள் வழங்கப்படும் என அரசு கூறியது, இதுவரை எந்த கோவிலுக்கும் கொடுத்ததாக நாங்கள் பார்க்கவில்லை.அதேபோன்று அரசாங்கத்தின் அமைச்சர்களும் ஊடகங்களுக்கு வந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குகின்றோம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இன்று அவ்வாறான நிவாரணங்களை நாம் காணவில்லை.

Advertisement

Advertisement

Advertisement