சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் காட்டுப்பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் இன்று (15) காணப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
யானை நேற்றிரவு உயிரிழந்திருக்கலாமென பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த யானை காட்டுப்பகுதியில் கிடங்கொன்றில் உயிரிழந்து காணப்படுகிறது.
குறித்த யானையின் உடம்பில் சூட்டுக் காயங்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.
யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னரும் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனவெட்டை காட்டுப்பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பூர் காட்டுப்பகுதியில் யானையின் சடலம் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் காட்டுப்பகுதியில் யானையொன்று இறந்த நிலையில் இன்று (15) காணப்படுவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.யானை நேற்றிரவு உயிரிழந்திருக்கலாமென பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.குறித்த யானை காட்டுப்பகுதியில் கிடங்கொன்றில் உயிரிழந்து காணப்படுகிறது.குறித்த யானையின் உடம்பில் சூட்டுக் காயங்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை.அதேவேளை இரண்டு தினங்களுக்கு முன்னரும் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனவெட்டை காட்டுப்பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.