• Sep 08 2024

இலங்கையில் விசேட தேவையுடையோருக்கும் தொழில்வாய்ப்பு! - ஜப்பான் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 19th 2023, 12:57 pm
image

Advertisement

இலங்கையில் விசேட தேவையுடையோர்களும் தொழில்வாய்ப்புகளில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என ஜப்பானின் ஐய்கா கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் 5 முதல் 10 சதவீதமான விசேட தேவையுடையோருக்கே தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஐய்கா திட்ட முகாமையாளர் ஷின்சு டக்காசி கொழும்பு மன்றக்கல்லூரியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 40 முதல் 50 சதவீதமான விசேட தேவையுடையோர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகிறது

ஆனால் இலங்கையை பொருத்தமட்டில் பாரிய பின்னடைவு காணப்படுகின்றது. இது சமூகத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.

சமூகத்தில் விசேட தேவையுடையோரையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதில் சில தொழிநுட்ப ரீதியான சிக்கல்கள் இருக்கலாம். அதனை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.

தற்போது நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

எனினும், எதிர்காலத்தில் இலங்கை கடுமையான நிலைகளில் இருந்து முன்னேறும்.

சுற்றுலா, கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விசேட தேவையுடையோருக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கி அவர்களையும் சமூக கட்டமைப்பிற்குள் உள்வாங்க முடியும் என ஐய்கா திட்ட முகாமையாளர் ஷின்சு டக்காசி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விசேட தேவையுடையோருக்கும் தொழில்வாய்ப்பு - ஜப்பான் வெளியிட்ட தகவல் இலங்கையில் விசேட தேவையுடையோர்களும் தொழில்வாய்ப்புகளில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என ஜப்பானின் ஐய்கா கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் 5 முதல் 10 சதவீதமான விசேட தேவையுடையோருக்கே தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக ஐய்கா திட்ட முகாமையாளர் ஷின்சு டக்காசி கொழும்பு மன்றக்கல்லூரியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.ஏனைய அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 40 முதல் 50 சதவீதமான விசேட தேவையுடையோர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகிறதுஆனால் இலங்கையை பொருத்தமட்டில் பாரிய பின்னடைவு காணப்படுகின்றது. இது சமூகத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.சமூகத்தில் விசேட தேவையுடையோரையும் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.அதில் சில தொழிநுட்ப ரீதியான சிக்கல்கள் இருக்கலாம். அதனை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.தற்போது நாடு பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.எனினும், எதிர்காலத்தில் இலங்கை கடுமையான நிலைகளில் இருந்து முன்னேறும்.சுற்றுலா, கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விசேட தேவையுடையோருக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கி அவர்களையும் சமூக கட்டமைப்பிற்குள் உள்வாங்க முடியும் என ஐய்கா திட்ட முகாமையாளர் ஷின்சு டக்காசி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement