• Sep 24 2024

ரத்துச் செய்யப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை!

Tamil nila / Sep 23rd 2024, 9:33 pm
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் தற்போதைக்கு ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக் காலத்திற்குள்ளாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட கடைசி ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்கவே இருப்பார் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்ட பின்னர் இதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்துச் செய்யப்படவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன் பிரகாரம் தற்போதைக்கு ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக் காலத்திற்குள்ளாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட கடைசி ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்கவே இருப்பார் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்ட பின்னர் இதற்கான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement