• May 01 2024

முக்கிய தொழிற்சங்கத்தினரின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் ஆராய்வு!SamugamMedia

Sharmi / Mar 16th 2023, 10:38 am
image

Advertisement

தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொழில் வல்லுனர்களின் ஒன்றியம் இன்று கூடவுள்ளது.

மேலும், அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காலை 08 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் காரணமாக இன்றைய நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய தொழிற்சங்கத்தினரின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் ஆராய்வுSamugamMedia தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தொழில் வல்லுனர்களின் ஒன்றியம் இன்று கூடவுள்ளது.மேலும், அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காலை 08 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் காரணமாக இன்றைய நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement