• Nov 26 2024

மத்திய மலைநாட்டில் உச்சம் தொட்ட வெப்பம் - நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை..!!

Tamil nila / Mar 27th 2024, 12:55 pm
image

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக மத்திய மலை நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்து வருகின்றன.

இந்நிலையில் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக தாழ் இறங்குவதாக மின்சார துறைசார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும்  தேசிய மின் உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கி வரும் நீர்த்தேக்களான மவுசாக்கலை மற்றும் காசல் ரி நீர்த்தேக்கங்களில் கடந்த காலங்களுக்கு மாறாக நாளொன்றுக்கு 3 அடி தாழ் இறங்குவதாக இந்த நீர்த்தேக்கங்களில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 ஹட்டன் மஸ்கெலியா,நோர்வூட் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. ஹட்டன் நகர சபை பிரதேசத்தில் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் அதிகார சபையினால் வலியுறுத்தப்பட்டு வருவதுடன் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

குறிப்பாக ஹட்டன் நகரில் உள்ள பல ஹோட்டல்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதற்காக மேலதிகமாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு நீருக்காக 1800 செலவிட்டு வாகனங்கள் ஊடக நீரினை பெற வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆகவே  நீரின் தேவை அதிகமாக காணப்படுவதனால் நீரினை வீண் விரையமாக்காது மிகவும் கவனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டில் உச்சம் தொட்ட வெப்பம் - நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை. நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக மத்திய மலை நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகு வேகமாக குறைந்து வருகின்றன.இந்நிலையில் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக தாழ் இறங்குவதாக மின்சார துறைசார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும்  தேசிய மின் உற்பத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கி வரும் நீர்த்தேக்களான மவுசாக்கலை மற்றும் காசல் ரி நீர்த்தேக்கங்களில் கடந்த காலங்களுக்கு மாறாக நாளொன்றுக்கு 3 அடி தாழ் இறங்குவதாக இந்த நீர்த்தேக்கங்களில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஹட்டன் மஸ்கெலியா,நோர்வூட் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. ஹட்டன் நகர சபை பிரதேசத்தில் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் அதிகார சபையினால் வலியுறுத்தப்பட்டு வருவதுடன் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.குறிப்பாக ஹட்டன் நகரில் உள்ள பல ஹோட்டல்களில் குடிநீர் பெற்றுக்கொள்வதற்காக மேலதிகமாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு நீருக்காக 1800 செலவிட்டு வாகனங்கள் ஊடக நீரினை பெற வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.ஆகவே  நீரின் தேவை அதிகமாக காணப்படுவதனால் நீரினை வீண் விரையமாக்காது மிகவும் கவனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement