• Nov 23 2024

கடும் வெப்பமான காலநிலை - கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம்

Chithra / Jul 31st 2024, 4:17 pm
image

 

தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்களின் நீர்ப் பாவனை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. 

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீரை 24 மணிநேரமும் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இனிவரும் நாட்களில் நீரினை மட்டுப்படுத்தப்பட்ட நேர ஒழுங்கில்  நீர் வழங்கப்படும் என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தற்போது தொடர்ச்சியாக, வெப்பமான காலநிலை நிலவிவருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் பூநகரி, பொன்னகர், பாரதிபுரம், விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை நீர் விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இக்காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்திலும்  நீர் விநியோகிக்கப்படுவதனால் பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

கடும் வெப்பமான காலநிலை - கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம்  தற்போது கிளிநொச்சியில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொது மக்களின் நீர்ப் பாவனை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீரை 24 மணிநேரமும் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இனிவரும் நாட்களில் நீரினை மட்டுப்படுத்தப்பட்ட நேர ஒழுங்கில்  நீர் வழங்கப்படும் என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.தற்போது தொடர்ச்சியாக, வெப்பமான காலநிலை நிலவிவருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் பூநகரி, பொன்னகர், பாரதிபுரம், விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை நீர் விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்திலும்  நீர் விநியோகிக்கப்படுவதனால் பொது மக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement