ரம்யா பாண்டியனின் வருகையை பட்டாசு வெடித்து மாஸாக கொண்டாடிய குடும்பம்!

378

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பிக்பாஸில் இருந்து திரும்பிய நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் மேளதாளம் முழங்க மாஸாக வரவேற்பு கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார். அதனை தொடர்ந்து கலக்கப்போவது யார் சீசன் 9 ல் ஜட்ஜ்ஜாக பங்கேற்றார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சிரித்தப்படியே விஷமத்தனமான வேலைகளை செய்வதாக ரம்யா பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்தது.

இதனால் சோம் மீது ரம்யா பாண்டியனுக்கு காதல் என்றும் பேசப்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக சென்ற போது ரம்யா பாண்டியன் தனக்கு கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு அந்த கவரை ரம்யாவுக்கு கொடுத்தார் சோம்.

அதையும் வித்தியாசமான கிஃப்ட் என பத்திரப்படுத்தி வைத்தார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்து விட்டு 4வது போட்டியாளராக வெளியேறிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர்.

அம்மா, தம்பி, அக்கா மற்றும் உறவினர்கள் என குடும்பமே கொண்டாடியுள்ளது.

செண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து மாலை அணிவித்து குத்தாட்டம் போட்டு ரம்யாவை வேற லெவலில் வரவேற்றனர் குடும்பத்தினர். மேலும் சிங்கப் பெண் என்று எழுதப்பட்ட கேக்கை வெட்டியும் சிங்கப் பெண் பாடலை ஒலிபரப்பியும் கொண்டாடினர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சிங்கப்பெண் தான்.. ஆனால் ஆரியிடம் அப்படி நடந்திருக்க கூடாது என கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: