• Nov 26 2024

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறவுகள்..! மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 6th 2024, 12:57 pm
image

 

எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்கள் எந்தவொரு அரசியல் தீர்மானங்களிலும் அங்கம் வகிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு எதிராக கூறப்படும் தேவையற்ற கருத்துக்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தெரிவித்தபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்  மூலமே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

குடும்ப உறுப்பினர்கள் மூலம் அல்ல. 

எனது உறவினரின் கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பு கூறமுடியாது. அவர்களை நேர்காணல் செய்வது நியாயமற்றது என தெரிவித்துள்ளார். 

மேலும், தேவையற்ற கருத்துகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். 

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அதிக வரிகளுக்கு எனது கட்சி எதிரானது. 

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எனது கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறவுகள். மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு  எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்கள் எந்தவொரு அரசியல் தீர்மானங்களிலும் அங்கம் வகிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கட்சிக்கு எதிராக கூறப்படும் தேவையற்ற கருத்துக்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தெரிவித்தபோதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அரசியல் தீர்மானங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்  மூலமே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.குடும்ப உறுப்பினர்கள் மூலம் அல்ல. எனது உறவினரின் கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பு கூறமுடியாது. அவர்களை நேர்காணல் செய்வது நியாயமற்றது என தெரிவித்துள்ளார். மேலும், தேவையற்ற கருத்துகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களில் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் அதிக வரிகளுக்கு எனது கட்சி எதிரானது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எனது கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement