• May 19 2024

பிரபல நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Tamil nila / Dec 23rd 2022, 3:35 pm
image

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் கைகலா சத்தியநாராயணா. நடிப்பின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும், பல புராண மற்றும் நாட்டுப்புற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். அந்தவகையில் இவர் இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 



சினிமாவில் பிஸியாக இருந்து வந்த இவர் கடந்த 1960-ஆம் ஆண்டு நாகேஸ்வரம்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். சினிமாவைத் தாண்டி இவர் அரசியலிலும் ஈடுபட்டார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மச்சிலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்.பி.யாக வெற்றி பெற்றார்.  


அதுமட்டுமல்லாது 1970கள் மற்றும் 1980களில் தெலுங்கு படங்களில் மிகவும் டெரரான வில்லன்களில் ஒருவராகவும் நடித்து வந்துள்ளார் கைகலா சத்தியநாராயணா. இவர் நீண்ட நாட்களாக வயோதிப நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சமீபத்தில் தான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.



இந்நிலையில் 87 வயதான இவர் இன்று காலை மரணம் அடைந்தார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் கைகலா சத்தியநாராயணா மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பிரபல நடிகர் திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய திரையுலகம். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் கைகலா சத்தியநாராயணா. நடிப்பின் மீது கொண்ட தீராத ஆர்வத்தால் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும், பல புராண மற்றும் நாட்டுப்புற படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். அந்தவகையில் இவர் இதுவரை 750க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக இருந்து வந்த இவர் கடந்த 1960-ஆம் ஆண்டு நாகேஸ்வரம்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். சினிமாவைத் தாண்டி இவர் அரசியலிலும் ஈடுபட்டார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மச்சிலிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்.பி.யாக வெற்றி பெற்றார்.  அதுமட்டுமல்லாது 1970கள் மற்றும் 1980களில் தெலுங்கு படங்களில் மிகவும் டெரரான வில்லன்களில் ஒருவராகவும் நடித்து வந்துள்ளார் கைகலா சத்தியநாராயணா. இவர் நீண்ட நாட்களாக வயோதிப நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சமீபத்தில் தான் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.இந்நிலையில் 87 வயதான இவர் இன்று காலை மரணம் அடைந்தார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் கைகலா சத்தியநாராயணா மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement