பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

479

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது நுரையீரலில் 75 சதவிகிதம் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்திய திரைப்பட நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் மேலும் அதிகமானது.

பூவே உனக்காக இ விஷ்வதுளசி, வரலாறு, உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

நடன இயக்குநராக மட்டுமின்றி சிவசங்கர், கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு, பாலாவின் வரலாற்று நாடகப் படமான பரதேசி ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசங்கர் மாஸ்டரின் குடும்பத்தினர், அவரது மருத்துவ கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் தவித்து வந்தனர்.

இதையறிந்த நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் சோனு சூட் மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் அவரது மருத்துவத்துக்கு உதவி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: