• Nov 26 2024

அரசாங்கத்தினால் ஏமாற்றப்படும் விவசாயிகள்...! எம்.எம்.மஹ்தி குற்றச்சாட்டு...!

Sharmi / Mar 14th 2024, 3:24 pm
image

நெற் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார்கள் என கிண்ணியா விவசாய சம்மேளன ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் எம்.எம் .மஹ்தி தெரிவித்துள்ளார். 

கிண்ணியாவில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அரசானது 7 மாவட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்வதற்காக தற்போது நிதியை ஒதுக்கி மனுக்களை கோரியிருக்கின்றார்கள்.

ஆனால், தற்போது எந்த விவசாயிகளிடமுமே நெல் இல்லை. அறுவடை ஆரம்பிக்கின்ற போது நெல் கொள்வனவு செய்வதற்கு பதிலாக அறுவடை செய்யப்பட்ட அனைத்து நெல்லும் கருப்பு சந்தையில் அநியாய விலைக்கு தனியாருக்கு விற்று தீர்ந்த பிறகு கொள்வனவு செய்வதற்கு அரசு முன் வந்துள்ளது.

கடன் பட்டு விவசாயத்தை செய்கின்ற விவசாயிகள் அறுவடையின் போது என்ன விலை என்றாலும் நெல்லை விற்று கடன்களை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விவசாயிகள் காணப்படுகின்றார்கள்.

சேதனப் பசளை என்று அனைத்து விவசாயிகளையும் விவசாயத்தையும் முழுமையாக சேதம் செய்தார்கள். பயிர்ச் செய்கை ஆரம்பிக்க முன் பாவிக்க வேண்டிய பசளைக்கு உர மானியம் என்று மிக சிறிய தொகையினை அறுவடையின் போது வழங்குகின்றார்கள். அறுவடை செய்யும் போது கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லை விவசாயிகளிடம் நெல் இல்லாத போது அதற்கான பணத்தை ஒதுக்குகிறார்கள்.

இவ்வாறே தொடர்ந்தும் படம் காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்ற போது எவ்வாறு விவசாயகளால் மீள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


அரசாங்கத்தினால் ஏமாற்றப்படும் விவசாயிகள். எம்.எம்.மஹ்தி குற்றச்சாட்டு. நெற் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார்கள் என கிண்ணியா விவசாய சம்மேளன ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் எம்.எம் .மஹ்தி தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.அரசானது 7 மாவட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்வதற்காக தற்போது நிதியை ஒதுக்கி மனுக்களை கோரியிருக்கின்றார்கள்.ஆனால், தற்போது எந்த விவசாயிகளிடமுமே நெல் இல்லை. அறுவடை ஆரம்பிக்கின்ற போது நெல் கொள்வனவு செய்வதற்கு பதிலாக அறுவடை செய்யப்பட்ட அனைத்து நெல்லும் கருப்பு சந்தையில் அநியாய விலைக்கு தனியாருக்கு விற்று தீர்ந்த பிறகு கொள்வனவு செய்வதற்கு அரசு முன் வந்துள்ளது.கடன் பட்டு விவசாயத்தை செய்கின்ற விவசாயிகள் அறுவடையின் போது என்ன விலை என்றாலும் நெல்லை விற்று கடன்களை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விவசாயிகள் காணப்படுகின்றார்கள்.சேதனப் பசளை என்று அனைத்து விவசாயிகளையும் விவசாயத்தையும் முழுமையாக சேதம் செய்தார்கள். பயிர்ச் செய்கை ஆரம்பிக்க முன் பாவிக்க வேண்டிய பசளைக்கு உர மானியம் என்று மிக சிறிய தொகையினை அறுவடையின் போது வழங்குகின்றார்கள். அறுவடை செய்யும் போது கொள்வனவு செய்ய வேண்டிய நெல்லை விவசாயிகளிடம் நெல் இல்லாத போது அதற்கான பணத்தை ஒதுக்குகிறார்கள்.இவ்வாறே தொடர்ந்தும் படம் காட்டப்பட்டு ஏமாற்றப்படுகின்ற போது எவ்வாறு விவசாயகளால் மீள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement